’பாகுபலி’ படத்தை பிரமாண்டங்களால் எப்படி பிரமாதப்படுத்தினாரோ, அப்படியே ‘ஆர்ஆர்ஆர்’ படத்தையும் ‘நாட்டு நாட்டு’ என்று பிச்சி உதறியிருக்கிறார் ராஜமெளலி. ஐந்தாண்டுகள் கொட்டிய உழைப்புக்கு மூன்றே நாளில் ரூ. 500 கோடி வசூலை அள்ளி எடுத்திருக்கிறார். படத்தின் பட்ஜெட் 500 கோடிதான். மூன்றே நாளில் ரூ.500 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அடுத்த மூன்று நாட்களில் இது ரூ.750 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்துள்ளனர். இதில், ராம ராஜு கதாபாத்திரத்தில் வரும் ராம் சரண் ராமராக உருவெடுத்து ஆங்கியேலருடன் போரிடுவதுபோல் படத்தில் காட்டப்பட்டுள்ளது விமர்சனங்களையும் அதேசமயம் வரவேற்பையும் பெற்றுள்ளது. சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். டிவிவி என்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.