ரிலையன்ஸ், பார்த் பெட்ரோலியம்-க்குப் போட்டியாக அதானி.. ஆட்டம் ஆரம்பம்..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் அதிகப்படியான ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் மக்களை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது யோசிக்கும் மிக முக்கியமான பிரச்சனை ரேன்ஞ் அதாவது நீண்ட தூர பயணத்தில் எலக்ட்ரிக் கார்கள் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பது தான் பெரும்பாலானோரின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக ரீடைல் எரிபொருள் விற்பனை செய்யும் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணியில் உள்ளது.

முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 விஷயங்கள்..!

இந்நிலையில் இத்துறை வர்த்தகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று பிற நிறுவனங்களுக்குப் போட்டியாக அதானி குழுமம் களத்தில் இறங்கியுள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழுமம் அடுத்தடுத்து தனக்கு அனுபவம் இல்லாத துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது போல் இந்த முறையும் பிரான்ஸ் நிறுவனத்தை நம்பி எலக்ட்ரிக் மொபிலிட்டி இன்பராஸ்டக்சர் வர்த்தகத்தில் இறங்கியுள்ளது கௌதம் அதானியின் அதானி குழுமம்.

அதானி டோட்டல் கேஸ்

அதானி டோட்டல் கேஸ்

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய எனர்ஜி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் உடன் இணைந்து உருவாக்கிய அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் மூலம் எலக்ட்ரிக் மொபிலிட்டி இன்பராஸ்டக்சர் வர்த்தகத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் முதல் பணியாக அகமதாபாத்தில் உள்ள மணிநகரில் உள்ள ATGL-இன் CNG நிலையத்தில் சார்ஜிங் நிலையம் அமைந்துள்ளது.

EV சார்ஜிங் ஸ்டேஷன்
 

EV சார்ஜிங் ஸ்டேஷன்

மின்சார வாகனம் (EV) சார்ஜிங் ஸ்டேஷன் மூலம் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டாளர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகப் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டும், பல்வேறு டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தும் தளமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது அதானி டோட்டஸ் கேஸ்.

சிஎன்ஜி கேஸ்

சிஎன்ஜி கேஸ்

இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் சிஎன்ஜி கேஸ் மற்றும் பைப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனமாக அதானி டோட்டஸ் கேஸ் விளங்குகிறது. மேலும் அதானி குழுமம் தனது எலக்ட்ரிக் வாகன வர்த்தகத்தைத் துவங்கும் பணியில் முதல் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளது.

1,500 EV சார்ஜிங் ஸ்டேஷன்

1,500 EV சார்ஜிங் ஸ்டேஷன்

அதானி டோட்டஸ் கேஸ் நாடு முழுவதும் 1,500 EV சார்ஜிங் நிலையங்களை அமைத்து அதன் நெட்வொர்க்கை விரிவுபடுத்தத் திட்டமிட்டு உள்ளது. மேலும் நாட்டில் EV எகோசிஸ்டம் அமைப்பின் தேவையைப் பொருத்து இதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

அதானி குழுமம் ஏற்கனவே ஆராம்கோ உடன் இணைந்து முக்கியமான வர்த்தகத்தையும், முதலீட்டையும் கைப்பற்றத் திட்டமிட்டு இருக்கும் நிலையில், தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் வர்த்தகத்திலும் இறங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani Total plans to setup 1500 EV charging station to compete with Reliance Industries

Adani Total plans to setup 1500 EV charging station to compete with Reliance Industries ரிலையன்ஸ், பார்த் பெட்ரோலியம்-க்குப் போட்டியாக அதானி.. ஆட்டம் ஆரம்பம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.