ஸ்ரவண பெளகோலா அமைச்சர் திட்டவட்டம்| Dinamalar

ஹாசன் : வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்ரவண பெளகோலா கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற அபிவிருத்திக்கு முக்கியத்துவம் தருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி, அங்கு விரைவில் வருகை தருவார்,” என கலால் துறை அமைச்சருமான, ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.ஹாசன் சென்னப்பட்டணாவில் அவர் நேற்று கூறியதாவது:

வரலாற்று பிரசித்தி பெற்ற சமண மத கோவில் மற்றும் பிரமாண்ட சிலை அமைந்துள்ள ஸ்ரவண பெளகோலா அபிவிருத்திக்கு, மாநில அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. மத்திய அரசும் கூட போதுமான நிதியுதவி வழங்குகிறது. அந்த புனித தலத்துக்கு வரும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சராக, மாநில அரசு என்னை நியமித்துள்ளது. எனக்கு மாவட்ட அபிவிருத்தியுடன், ஸ்ரவண பெளகோலாவின் வளர்ச்சியும் முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.