'5 லட்சம் பேருக்கு இலவச விசா' – மத்திய அரசு முடிவு

5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை முழுவீச்சில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாத் துறையை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில், வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 5 லட்சம் பேருக்கு இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

இதையும் படிக்க: அரசு நிறுவனங்களில் இனி 5 நாட்கள் தான் வேலை – மணிப்பூர் அரசு அறிவிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.