Jio அதிரடி – முதல் முறையாக ஒரு மாத திட்டம் அறிமுகம்!

நீங்கள்
Jio
வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். நீங்கள் ஜியோ பயனராக இல்லை என்றாலும், நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தைப் பார்த்த பிறகு அவசியம் உங்கள் நெட்வெர்க் ஆபரேட்டரை தொடர்பு கொண்டு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்படி அறிவுறுத்துவீர்கள்.

இந்தியாவின் நம்பர் 1 நெட்வெர்க்காக வலம் வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக ரூ.259 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டமானது, ஒரு மாதன் முழுவதும் செல்லுபடியாகும் என்பது தான் கூடுதல் சிறப்பு.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பிடுகையில், வரம்பற்ற அழைப்புகளுடன் ஒரு காலண்டர் மாதம் செல்லுபடியாகும் திட்டம் அறிமுகமாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டிராய் உத்தரவு

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (
TRAI
) சமீபத்தில் நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் விதமான அறிவிப்பை வெளியிட்டது. ஒரு மாதம் செல்லுபடியாகும் என்று Prepaid recharge திட்டங்களை அறிவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 28 நாள்கள் மட்டுமே வேலிடிட்டியை வழங்கி பயனர்களை சோதித்து வந்தது.

இது தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில், தற்போது டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது. டிராய் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, 28 நாள்களுக்குப் பதிலாக 30 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும், 30 நாள்கள் செல்லுபடியாகும் திட்ட விவரங்களை 60 நாள்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் டிராய் குறிப்பிட்டுள்ளது.

jio hotstar free offer: IPL 2022 கிரிக்கெட் கொண்டாட்டம் – இலவசமாக Hotstar அணுகல் வேண்டுமா!

TRAI இன் புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு திட்ட வவுச்சர், ஒரு சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் ஒரு காம்போ வவுச்சரையாவது சமர்ப்பிக்க வேண்டும். இது 28 நாள்களுக்கு பதிலாக முழு 30 நாள்களுக்கு செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், அந்தத் தேதியில் இருந்து அதைச் செய்ய முடியும்.

ஜியோ ரூ.259 ரீசார்ஜ் திட்டம் (Jio 259 Plan Details)

இந்நிலையில் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ஒரு மாத வேலிட்டிட்டி திட்டத்தின் விலை ரூ.257 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தினசரி 1.5GB டேட்டாவை வழங்கும். தினசரி வரம்பை அடைந்தால், பயனர்கள் 64Kbps வேகத்தின் இணையத்தை பயன்படுத்தலாம். கூடுதலாக, வரம்பற்ற குரல் அழைப்பு கிடைக்கும். மேலும், ஒரு நாளைக்கு 100 SMS வீதம் வழங்கப்படும்.

ஏர்டெல் Vs ஜியோ Fiber broadband திட்டங்கள் – 4,000 GB வரை டேட்டா பலன்கள்!

இந்த திட்டத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இன்று (மார்ச் 28) நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தால், அடுத்த மாதம் (ஏப்ரல் 28) வரை இந்த திட்டம் செல்லுபடியாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீங்கள் ரீசார்ஜ் செய்திருந்தால், தானாகவே Renew ஆகிவிடும். சரியாக ஒரு மாதம் வேலிடிட்டி உடன் திட்டங்களை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் சரியான தேர்வாக இருக்கும்.

மேலதிக செய்திகள்:
Android 12, OIS கேமரா உடன் வெளியான இரண்டு Samsung போன்கள்!சும்மா மாஸ் காட்டும் Poco X4 Pro 5G போன் – ஒரு குறையும் இல்லங்க!எலான் மஸ்க் தொடங்கும் புதிய சோஷியல் மீடியா?

அடுத்த செய்திஎலான் மஸ்க் தொடங்கும் புதிய சோஷியல் மீடியா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.