94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு கிடைத்தது. தனக்கு முதல் முறையாக ஆஸ்கர் கிடைத்த சந்தோஷத்தில் கண் கலங்கிவிட்டார்
வில் ஸ்மித்
.
CODA படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ட்ராய் கோட்சுருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆஸ்கர் விருது பெற்ற இரண்டாவது காது கேளாத கலைஞர் ட்ராய். அதே சமயம் ஆஸ்கர் வென்ற முதல் காது கேளாத நடிகர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.
தன் படக்குழு மற்றும் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்தார் ட்ராய். மேலும் காது கேளாதோர் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள், CODA சமூகத்திற்கு இந்த ஆஸ்கர் விருதை சமர்பிப்பதாக தெரிவித்தார்.
CODA படத்தில் ட்ராயுடன் சேர்ந்து நடித்த மார்லீ மார்டின் தான் ஆஸ்கர் விருது பெற்ற முதல் காது கேளாத கலைஞர் ஆவார். 1987ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் Children of a Lesser God படத்திற்காக மார்லீக்கு விருது கிடைத்தது.
2021ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்ற யூன் யூ யுங் ட்ராய்த்து விருது வழங்கினார். அரங்கில் இருந்த அனைவரும் சைகையில் பாராட்டினார்கள்.
Dhanush:தனுஷ் பற்றி புது மேட்டர் சொன்ன பயில்வான் ரங்கநாதன்
அடுத்த செய்தி16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா… யார் கூடன்னு பாருங்க!