Petrol and Diesel Price: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: வேலைநிறுத்தத்தால் சென்னை உட்பட தமிழகம் முழவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
India news update: நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது.
விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.
வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளது.
கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் பதவியேற்பு
கோவா முதல்வராக 2வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார். பனாஜியில் உள்ள சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பத்ம விருதுகள் விழா
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் 2வது கட்டமாக இன்று வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மீதமுள்ள 64 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார்.
World News update: துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
Corona Update: தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனாவுக்கு 394 பேர் சிகிச்சை பெற்று வருவரும் நிலையில் புதிதாக உயிரிழப்பு ஏதுவும் பதிவாகவில்லை. இந்திய அளவில் 1,421 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்து இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியனானார்.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்.
கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை “தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய்“ திரைப்படத்திற்காக “ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன்“ வென்றார்.
லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி லாங் குட்பை’ வென்றது.
தமிழக அரசிடம் ரூ.88 கோடி சிறப்பு நிதியைக் கோரியது சென்னைப் பல்கலைக்கழகம். ரூ.100 கோடி நிதிப் பற்றாக்குறையால் ஓய்வூதியம், ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், நிதி நெருக்கடியைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘டிரைவ் மை கார்’ வென்றது.