பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மவாட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள அவர், அதில் “ஏப்ரல் 27ஆம் தேதி வரை ‘ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தப்பட வேண்டும். கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். கஞ்சா, குட்கா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பார்சல் மூலம் போதை மாத்திரை, போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: காதலி மீது சந்தேகம் – ஆப்பிள் வாட்ச் மூலம் கண்காணித்த காதலன் கைது!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM