இங்கிலாந்தில் கேரள மாணவியை கத்தியால் குத்திய இந்திய வாலிபர்

லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹேம் பகுதியில் ஐதராபாத் வாலா பிரியாணி கடை ஒன்று உள்ளது.  இதில் சோனா பிஜு (வயது 20) பணியாற்றி வந்துள்ளார்.  கேரளாவை சேர்ந்த சோனா இங்கிலாந்தில் உள்ள பல்கலை கழகத்தில் படித்து வருபவர்.

அவர் படித்து கொண்டே பகுதிநேர ஊழியராகவும் உணவு விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில், ஸ்ரீராம் அம்பர்லா (வயது 23) என்ற இந்தியர் அந்த கடைக்கு சென்றுள்ளார்.  அவருக்கு வேண்டிய உணவு வகைகளை கொண்டு வரும் பணியில் சோனா ஈடுபட்டு உள்ளார்.
இந்த நிலையில், திடீரென சோனாவை அந்த நபர் கத்தியால் குத்தியுள்ளார்.  தடுக்க வந்த மற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களையும் மிரட்டி உள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சோனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நபரை போலீசார் கைது செய்து தேம்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.  இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 25க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணம் தெரிய வரவில்லை.  அதற்கான பின்னணி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதுபற்றிய தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி கேட்டு கொள்ளப்படடு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.