தமிழக அமைச்சரவையில் இன்று இரண்டு இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டன. மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றபின் 10 மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.
பட்டியலின அரசு அதிகாரியை சாதியின் பெயரால் இழிவாக பேசியதாக ராஜ கண்ணப்பன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால்தான் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் அதிமுக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பகுதியில் ‘‘அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பதுதான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா?
இது தண்டனையா அல்லது பரிசா?
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூட துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்? @mkstalin’’ என விமர்சனம் செய்துள்ளது.