இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி அமெரிக்கா அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போது பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்தன. சில நாடுகள் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியது. அமெரிக்காவும் இந்தியாவுக்கான பயணத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தி இருந்தது. இதற்கு பிறகு இந்தியாவில்
கொரோனா
பரவல் குறைந்த பின் இந்தியாவுக்கு பயணம் செய்வதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது.
இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா மேலும் நீக்கியுள்ளது. கொரோனா பாதிப்புள்ள நாடுகளை நான்கு வகையாக பிரித்துள்ள அமெரிக்கா, நிலை 4 பட்டியலில் உள்ள நாடுகளுக்கு கண்டிப்பாக பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 நாட்கள் முழு ஊரடங்கு – அரசு உத்தரவால் பொது மக்கள் ஷாக்!
இந்நிலையில் கொரோனா அபாய பட்டியலில் இந்தியாவின் நிலை 3-ல் இருந்து நிலை 1-க்கு அமெரிக்கா மாற்றி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்து உள்ளதால் இந்தியாவை நிலை 1-க்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மாற்றி உள்ளது. நிலை 3-ல் இருந்து (உயர்) நிலை 1-க்கு (குறைவு)
இந்தியா
மாற்றப்பட்டு உள்ளதால் அமெரிக்காவில் இருந்து பயணம் செய்வது எளிதாகி உள்ளது. இதே போல் கினியா மற்றும் நமீபியா நாடுகளும் நிலை 1-க்கு மாற்றப்பட்டு உள்ளது. நிலை 1 என்பது தடுப்பூசி போடப்படாத அமெரிக்கர்களை மட்டும் அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வலியுறுத்துகிறது.
அடுத்த செய்திகேரள மாணவி.. ஹைதராபாத் மாணவர்.. சரமாரி குத்து.. இங்கிலாந்தில் அம்பர்லா கைது!