இலங்கை: இந்தியா – இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இலங்கை சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் கையெழுத்தானது. யாழ்ப்பாணத்தை ஒட்டி உள்ள மூன்று தீவுகளில் மின்சாரத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தாகியுள்ளது. இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு மந்திரி இடையே முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியா- இலங்கைக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.