இயல்புக்கு திரும்பியதா பேருந்து இயக்கம்? தமிழக போக்குவரத்து துறையின் அறிக்கை சொல்வதென்ன?

தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் நேற்றை விட இன்று அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 90% பேருந்துகள் இயக்குப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது, மின்சார திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் பலர் நேற்றும் இன்றும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான பேருந்துகள் இயங்காததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். உதாரணத்துக்கு சென்னையை பொருத்தவரை, 37 பணிமனைகளில் இருந்து வழக்கமாக 3,100 பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நேற்று 90% பேருந்துகள் இயக்கப்படவில்லை. விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றுவிட்டு, சென்னை திரும்பியவர்களுக்கு, நகர பேருந்துகள் கிடைக்காமல் தவித்தனர். இதனால் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துவந்தனர். அதைத்தொடர்ந்து இன்று 60 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என தொமுச அறிவித்திருந்தது.
image
அதேபோல சென்னை கோயம்பேட்டிலிருந்து தற்போது வரை 40 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்துகளில் மக்கள் பயணித்து வருகின்றனர். நேற்று பேருந்துகள் இயக்கப்படாததால் ரயில்களில், கூட்டம் அலைமோதிய நிலையில், இன்று புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் குறைந்துள்ளது. இதேபோல, மதுரை மாவட்டத்தில் 85 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் போதிய அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மொத்தமாக தமிழகத்தில் இன்று 90% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் சென்னையில் 98.02% மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும், தமிழகம் முழுவதும் 17,268 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்தி: 8 நாள்களில் 7வது முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு… அத்தியாவசிய பொருட்களும் விலை உயருமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.