கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டை நாடான இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்வதாக இந்தியா உறுதி அளித்துள்ளது. நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று அந்தநாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.
இது குறித்து அவர், சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ேச, பிரதமர் மகிந்தா ராஜபக் சே, நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்து, இந்தியா – இலங்கை இடையிலான நல்லுறவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து பேசினேன்.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து முழு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கும் என தெரிவித்தேன். இந்த சந்திப்பின் போது, புத்த மத கலாசாரம் மற்றும் பாரம்பரிய வளர்ச்சி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.அத்துடன் யாழ்ப்பாணத்தில், செயற்கை கால் பொருத்தும் முகாமின் பணிகளையும், ‘வீடியோ’வில் பார்வையிட்டேன்.
கொழும்பில், ‘லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தாவை சந்தித்து பேசினேன். அவர், எரிபொருள் கையிருப்பு நிலவரம், ‘சப்ளை’ ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்தியா வழங்கியுள்ள 3,750 கோடி ரூபாய், இலங்கை மக்களின் அன்றாட வாழ்விற்கு உதவியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement