உக்ரைன் போருக்கு செல்ல தடை! குடிமக்களை எச்சரிக்கும் 7 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்


ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனில் சண்டையிட வேண்டாம் என்று தங்கள் குடிமக்களை வலியுறுத்துகின்றன.

ரஷ்ய படையினரை எதிர்த்து போராடிவரும் உக்ரேனிய போராளிகள் கூட்டத்தில் சேருவதைத் தவிர்க்குமாறு ஏழு ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள் தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.

பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் நீதி அமைச்சர்களால் இந்த முறையீடு செய்யப்பட்டது.

ஏழு நாடுகளின் அமைச்சர்கள் திங்கள்கிழமை (மார்ச் 28) பிரஸ்ஸல்ஸில் அவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், உக்ரைனில் போருக்குச் செல்லும் தன்னார்வப் போராளிகளின் வரிசையில் ஐரோப்பியர்கள் சேருவதை ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

📷Reuters

பிப்ரவரி 24 அன்று ரஷ்ய துருப்புக்கள் படையெடுத்த பிறகு, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரேனியர்களுடன் இணைந்து போராடும் “சர்வதேச படையணியின்” ஒரு பகுதியாக வெளிநாட்டினரை தனது நாட்டின் உதவிக்கு வருமாறு வெளிப்படையாக அழைத்தார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 6 அன்று, உக்ரைன் தனது அழைப்புக்கு சுமார் 20,000 பேர் பதிலளித்ததாகக் கூறியது.

உக்ரைனில் பயங்கரமான கூலிப்படையை களமிறக்கும் ரஷ்யா! பிரித்தானியா தகவல்

📷AFP

பிரஸ்ஸல்ஸில் உள்ள தனது சகாக்களுடன் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின், “ஒரு போர் மண்டலத்திற்கு பயணிப்பதை நாங்கள் வெளிப்படையாக ஆதரிக்கமாட்டோம்” என்று கூறினார். மேலும், தனக்கு தெரிந்தபடி, பிரான்சில் இருந்துதான் ஒருவர் கூட உக்ரைன் போருக்கு செல்லவில்லை என்று கூறினார்.

27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக பிரான்ஸ் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலில் மிதந்துவரும் உக்ரைன் கண்ணிவெடிகள்! கருங்கடலில் கப்பகளுக்கு ஆபத்து.., 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.