கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மத்தியஸ்த முயற்சிகள் தொடர்பாக, இந்தியா உட்பட பல நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகள் தொடர்பாக இந்தியா, துருக்கி, சீனா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பிற நாடுகளுடன் விவாதிக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மேலும் படிக்க | துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய குட்டெரெஸ், “அரசியல் தீர்வுக்கான மத்தியஸ்த முயற்சிக்கான வெவ்வேறு வழிகளைக் கண்டறிய இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பல நாடுகளுடன் நான் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்” என்றார்.
ஐ.நா.வின் தலைவர், ‘இந்தியாவுடன் கத்தார், துருக்கி, இஸ்ரேல், சீனா மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்க இந்த முயற்சிகள் அனைத்தும் அவசியம் என்று நான் நம்புகிறேன். இந்த நாடுகள் அனைத்தும் அவரது முயற்சியை ஆதரிக்கின்றனவா என்ற கேள்விக்கு, குட்டெரெஸ், “நான் நம்புகிறேன்” என்றார்.
இந்த விவகாரத்தை இந்தியா மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது. ரஷ்யாவுடனான அதன் பழைய உறவுகளே இதற்குக் காரணம். இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கூட இந்தியா பங்கேற்கவில்லை.
இருப்பினும், அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. துருக்கியில் இன்று இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!