உடுமலைப் பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் சண்முகம் என்பவரின் மகள் கர்த்திகா உடுமலையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
கார்த்திகாவின் தாயார் வழக்கம் போல் பணி முடித்து நேத்து மாலை வீட்டித்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புற வாசலருகே மாணவி கர்த்திகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அழுது கூச்சலிட்டார். அவரின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மாணவி கார்த்திகாவை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவி இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.