சென்னை: எழிலகத்தில் தமிழக நில அளவை துறை கட்டிட 2வது தளத்தில் ஆணையர் வினய் அலுவலகமும், அருகில் ஓய்வு அறையும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு ஆணையர் ஓய்வு அறையில் தீவிபத்து ஏற்பட்டது. திருவல்லிக்கேணி தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த ஏசி, சோபா உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.