கண்ணெல்லாம் சிவந்து.. தோல் உரிந்து.. புடின் நண்பரை.. விஷம் வைத்துக் கொல்ல முயற்சி!

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் கோடீஸ்வரர்
ரோமன் அப்ரமோவிச்
மற்றும் உக்ரைனைச் சேர்ந்த 2 பேருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த 3 பேரும் உயிர் தப்பியுள்ளனர்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த இந்த 3 பேரும் முயற்சி செய்து வருகின்றனர். பல கட்டமாக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இவர்களின் முயற்சியை விரும்பாத சிலர் (ரஷ்யாவைச் சேர்ந்த உக்ரைனுக்கு எதிரான தீவிர மனப்போக்கு கொண்டவர்கள்) இவர்களை விஷம் வைத்துக் கொல்ல முயன்றுள்ளனர். ஆனால் 3 பேரும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிர் பிழைத்துள்ளனர்.

ஜெலன்ஸ்கிக்கு எதிராக.. 25 பேர் கொண்ட கும்பல்.. “குறி” தப்பியது.. பரபரக்கும் உக்ரைன்!

இதுதொடர்பான செய்தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

புடினுக்கு மிக நெருங்கிய வட்டாரத்திற்குள் இருப்பவர் அப்ரமோவிச். மிகப் பெரிய கோடீஸ்வரர். யூத இனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேலின் 2வது பெரிய பணக்காரர், ரஷ்யாவின் 11வது பெரிய பணக்காரர். புடினுக்கு மிக வேண்டப்பட்டவரான இவர் மீது சமீபத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. புடினுக்கு நெருக்கடி கொடுத்து போரை கைவிட வைக்குமாறும் அப்ரமோவிச்சுக்கு நெருக்குதல் தரப்பட்டது.

இதையடுத்து உக்ரைன், ரஷ்ய தரப்பில் தொடர்ந்து பேசி வந்தார் அப்ரமோவிச். கீவ்,
மாஸ்கோ
, இஸ்தான்புல் என பல்வேறு நகரங்களுக்கும் போய்க் கொண்டிருந்தார். கீவ் நகரில் அவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இருவரைச் சந்தித்துப் பேசி விட்டு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குத் திரும்பிய பிறகு அவரது கண்கள் சிவந்தன. முகத்திலும், கைககளிலும் பயங்கர அரிப்பு ஏற்பட்டு தோல் உரிய ஆரம்பித்தது. கண்களிலும் கடுமையான வலி ஏற்பட்டு தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

விமானம் கேட்டோம்.. பீரங்கி கேட்டோம்.. எதையுமே தரலை.. நேட்டோ மீது பாயும் ஜெலன்ஸ்கி

உடனடியாக 3 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், 3 பேருக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். விரைவான சிகிச்சை காரணமாக அவர்கள் 3 பேரும் காப்பாற்றப்பட்டு விட்டனர். அவர்கள் அபாய கட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையை விரும்பாத ரஷ்யாவைச் சேர்ந்த “ஹார்ட்லைனர்கள்”தான் விஷம் வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து கிறிஸ்டோ குரோசேவ் என்ற விசாரணை அதிகாரி கூறுகையில், கொல்லும் நோக்குடன் இவர்களுக்கு விஷம் கொடுக்கப்படவில்லை. மாறாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் சாதாரண விஷம்தான் தரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவலானிக்கும் இதேபோல கொடூரமான விஷம் கொடுத்து அவர் பின்னர் உயிர் பிழைத்தார் என்பது நினைவிருக்கலாம். அவரது நரம்பில் விஷம் செலுத்தப்பட்டு கொல்ல முயற்சி நடந்தது.

“சபாஷ்.. சரியான பளார்”.. வில் ஸ்மித் விட்ட அடிக்கு.. ராமதாஸ் சூப்பர் சப்போர்ட்!

அப்ரமோவிச் மீதான தடையை நிறுத்தி வைக்குமாறு சமீபத்தில்தான் அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி. ரஷ்யாவிடம் போரை நிறுத்துமாறு கூறி இதுதொடர்பான முயற்சிகளை அப்ரமோவிச் செய்யக் கூடும் என்பதால் அவர் மீதான தடையை மட்டும் நிறுத்தி வைக்குமாறு ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் அப்ரமோவிச் உக்ரைன் வந்து செல்லவும் தடை இல்லாமல் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் அவரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.

இந்தக் கொலை முயற்சி தொடர்பாக ஜெலன்ஸ்கி தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அதேபோல ரஷ்யத் தரப்பிலிருந்தும் எந்தக் கருத்தும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

அடுத்த செய்திகூடுதல் கல்வி கட்டணம் தேவையில்லை: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.