காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
அன்மையில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திரையரங்கில் பார்த்தனர்.
அத்திரைப்படத்துக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு பாஜக-வினர் தரப்பில் முதலமைச்சர் ரங்க்சாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அத்திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.