உக்ரைன் தலைநகர் கீவில் படைகளைக் குறைத்துக் கொள்வதாக ரஷ்யா முடிவெடுத்துள்ளது.துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் இன்று நடைபெற்ற உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
துருக்கி அதிபா் ரிசப் தாயிப் எா்டோகன், ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடினுடன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசிய பின்னா் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. முன்னதாக, உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ரஷ்ய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், எங்களது இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதே உக்ரைனின் முன்னுரிமை. அதேவேளையில் பாதுகாப்பு உத்தரவாதம், நடுநிலை வகிப்பது, அணுஆயுதம் இல்லாத நாடு ஆகியவற்றை அறிவிக்க உக்ரைன் தயாராக உள்ளது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள படைகளை குறைத்துக் கொள்வதாக ரஷ்யா தெரிவித்ததுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவில் படைகளைக் குறைத்துக் கொள்வதாக ரஷ்யா முடிவெடுத்துள்ளது.துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் இன்று நடைபெற்ற உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தையில் இம்முடிவு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.