இங்கிலாந்தில் சக நாட்டு மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு ஹாம்ப்ஷயரில் உள்ள கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்தான் இவர்கள்.
கத்தியால் குத்திய மாணவரின் பெயர் ஸ்ரீராம் அம்பர்லா. வயது 23, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். கத்திக் குத்துப்பட்ட மாணவிக்கு வயது 20 வயது இருக்கும். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இருவரும் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.
டெல்லியைக் கலக்கப் போகும் “அண்ணா கலைஞர்”.. கம்பீரமான குட்டி “அரண்மனை”!
சம்பவத்தன்று கிழக்கு ஹாம்ப்ஷயரில் உள்ள ஹோட்டலுக்கு அந்த மாணவி வந்துள்ளார். அதே ஹோட்டலில்தான் பகுதி நேரமாக சர்வர் வேலை பார்த்து வருகிறார் இந்த
ஹைதராபாத் மாணவர்
. மாணவி ஆர்டர் செய்திருந்த உணவை அவருக்கு வைத்துக் கொண்டிருந்தவர் திடீரென கத்தியை எடுத்து அந்த மாணவியை சரமாரியாக குத்த ஆ ரம்பித்தார்.அக்கம் பக்கத்தில் இருந்தோர் அதைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் குத்தி விடுவதாக அந்த மாணவர் மிரட்டினார். இந்த நிலையில் போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து அந்த மாணவரைக் கைது செய்தனர். மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
“Jetlag” கொஞ்சம் கூட இல்லையே.. “குடுகுடு”ன்னு ஓடுறாரே.. வியக்க வைக்கும் ஸ்டாலின்!
கைது செய்யப்பட்ட மாணவர் தேம்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 25ம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி அதுவரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.கத்திக் குத்துப்பட்ட கேரள மாணவியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற போதிலும் கூட அவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கிறதாம். அம்பர்லா ஏன் மாணவியைக் கத்தியால் குத்தினார் என்று தெரியவில்லை. அதுதொடர்பான விசாரணையில் போலீஸார் இறங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடக்கிறது.
அடுத்த செய்தி9 நாட்கள் முழு ஊரடங்கு – அரசு உத்தரவால் பொது மக்கள் ஷாக்!