உக்ரைனுக்கு ஆதரவாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் ரஷ்ய கோடீஸ்வரருக்கு உக்ரைன் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்று துருக்கியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் ரஷ்ய கோடீஸ்வரரும் செல்சி கால்பந்து அணியின் உரிமையாளருமான ரோமன் அப்ரமோவிக் உக்ரைன் சார்பாக மீண்டும் கலந்து கொண்டுள்ளார்.
முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது ரோமன் அப்ரமோவிக் உட்பட மூன்று பேர்களுக்கு விஷம் அளிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
மட்டுமின்றி, அதன் அறிகுறிகளுடன் கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிக் காணப்பட்டதாகவும், துருக்கியில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கீவ் நகரில் நடந்த முதல் சுற்று அமைதிப்பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் Rustem Umerov என்பவருடன் இனிப்பு சாப்பிட்டதாகவும், அதன் பின்னரே இந்த இருவருக்கும் மூன்றாவது ஒருவருக்கும் விஷம் அளிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோமன் அப்ரமோவிக் உட்பட மூவருக்கு விஷம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை முற்றாக நிராகரித்துள்ள ரஷ்ய தரப்பு, ரோமன் அப்ரமோவிக் ஒன்றும் உத்தியோகப்பூர்வ உறுப்பினர் அல்ல எனவும், அவரை குறிவைக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் எவரும், ரோமன் அப்ரமோவிக் உட்பட சாப்பிடவோ குடிக்கவோ கூடாது எனவும், எதையும் தொட வேண்டாம் எனவும் உக்ரைன் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட எவரும் கைகுலுக்கவும் இல்லை என குறிப்பிட்டுள்ள உக்ரைன் பத்திரிகையாளர் ஒருவர், போர் நிறுத்தம் தொடர்பில் விவாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.