தென் கொரிய நிறுவனமான Samsung சமீபத்தில் Galaxy Z Flip 3 ஸ்மார்ட்போனை சந்தையில் களமிறக்கி போன் தயாரிப்பு நிறுவனஙகளுக்கு அதிர்ச்சி அளித்தது. அதனைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனமும் ஒப்போ ஃபைண்ட் என் (OPPO Find N) ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் களமிறக்கிறது.
எப்போதும் பிரம்மாண்டத்தை சந்தையில் அறிமுகம் செய்யும்
Xiaomi
நிறுவனத்திற்கு, இந்த வெளியீடுகள் ஒரு சவாலாகவே பார்க்கப்பட்டது. உடனடியாக சியோமி Foldable ஸ்மார்ட்போன் குறித்து வதந்திகள் கசியத் தொடங்கின.
ஆனால், அதை மெய்ப்பிக்கும் விதமாக சியோமி விரைவில் புதிய Foldable ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வரும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலில் சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jio அதிரடி – முதல் முறையாக சூப்பர் திட்டம் அறிமுகம்!
Mi Mix Fold 2 அம்சங்கள்
புதிதாக அறிமுகமாகும் போல்டபிள் போனின் பெயர் ‘Mi Mix Fold 2’ ஆக இருக்கும் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் LTPO OLED பேனலை, சியோமி தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் மற்றும் கார்னிங் இணைந்து யு.டி.ஜி. (அல்ட்ரா தின் கிளாஸ்) மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனலை 2021 ஆம் ஆண்டு உருவாக்கின.
இந்த ஸ்மார்ட்போனின் உள்பக்கம் மடிக்கக்கூடிய Foldable 8″ இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், வெளிபக்கம் 6.5″ இன்ச் டிஸ்ப்ளே இருக்கும். இவை LTPO OLED பேனலாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை பெறும் என்று தெரியவந்துள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, போல்டபிள் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 புராசஸர் கொண்டு இயக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதில்,
Android 12
இயங்குதளத்தின் அடிப்படையிலான, சியோமியின் பிரத்யேக MIUI 13 ஸ்கின் இதில் நிறுவப்பட்டிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலிவு விலை Oppo போன் – ஆர்டர் போட்டு ஆஃபரை பெற ரெடியா!
எதிர்பார்க்கப்படும் மி மிக்ஸ் போல்ட் 2 விலை
வெளியாக இருக்கும் புதிய Mi Mix Fold 2 ஸ்மார்ட்போனில் 12GB வரை ரேம் மெமரி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீட்டிக்கப்பட்ட Virtual RAM அம்சமும் இதில் கொடுக்கப்படும். ஸ்டோரேஜ் மெமரி பொருத்தவரை 128GB, 256GB ஆகிய இரு தேர்வுகள் கொடுக்கப்படலாம்.
மேலும், f/1.5 அபெர்சர் லென்ஸுடன் கூடிய 50MP முதன்மை கேமரா இந்த சியோமி போல்டபிள் ஸ்மார்ட்போனில் இருக்கும். முக்கியமாக போட்டி நிறுவனங்களை விட சியோமி போல்டபிள் ஸ்மார்ட்போனின் விலை மிகக் குறைவாக இருக்கும் என்று நம்பலாம்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாத இறுதிக்குள் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உத்தேச தொடக்க விலை ரூ.85,000ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்:
வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் – Redmi வெளியிட்ட 100 இன்ச் ஸ்மார்ட் டிவி!OnePlus வெளியிடப்போகும் 6 ஸ்மார்ட்போன்கள் Snapdragon சிப்செட் உடன் வரும் மலிவு விலை Redmi ஸ்மார்ட்போன்!
அடுத்த செய்திமலிவு விலை Oppo போன் – ஆர்டர் போட்டு ஆஃபரை பெற ரெடியா!