சுவீடன் நாட்டு நடிகையை ஓகே பண்ணிய தனுஷ்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார்
தனுஷ்
. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. இதனிடையில் தனது அண்ணன்
செல்வராகவன்
இயக்கத்தில் ‘
நானே வருவேன்
‘ படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

‘நானே வருவேன்’ படத்தில் இரண்டு விதமான கெட்டப்களில் நடிக்கிறார் தனுஷ். ஒரு கெட்டப்பில் ஸ்டைலிஸ் இளைஞராக இருக்கும் தனுஷ், மற்றொரு கெட்டப்பில் நடுத்தர வயது தோற்றம் கொண்ட கெட்டப்பில் உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. செல்வராகவனும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு பிரச்சனையா..?: வெளியான பகீர் தகவல்..!

இந்நிலையில் இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக சுவிஸ் நாட்டு நடிகை
எல்லி அவ்ரம்
நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு நாயகியாக முன்னணி நடிகை நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எல்லி அவ்ரம் நடிகை காஜல் அகர்வால் நடித்த ’பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘நானே வருவேன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை இயக்கியுள்ளது. இந்தப்படத்தின் புதிய போஸ்டர் அண்மையில் வெளியானது. செம்ம ஸ்டைலாக தனுஷ் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் தனுஷ் புகைப்பிடிப்பது சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பக்கத்தில் இருந்தவரை கூட மறந்து விட்டேன்; ஆர் ஆர் ஆர் குறித்து பெண் ரசிகர்!

அடுத்த செய்திஉதயநிதி இதையும் விட்டுவைக்கல போல? விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.