IPL 2022 Tamil News: 15-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த 26ம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தொடரில் லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், அட்டவணையில் முன்னேற 10 அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறியது. எனினும், அணியின் முன்னாள் கேப்டன் தோனி அரைசதம் கடந்து அசத்தினார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் சேர்த்து இருந்தது.
தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களிலே இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணி தொடரில் அதன் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், சென்னை அணியின் வீரர்கள் செங்கற்கள் மற்றும் சிமென்ட் உதவியுடன் சிறிய கட்டத்தை கட்டியுள்ளனர். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கேப்டன் ரவீந்திர ஜடேஜா, ராபின் உத்தப்பா மற்றும் டுவைன் பிராவோ உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் கட்டிடம் கட்டும் பயிற்சியில் செங்கற்களில் சிமென்ட் பூசுவதற்கு தங்கள் கைகளைப் போலவே அனைத்து வகையான கருவிகளையும் பயன்படுத்துவதை வீடியோவில் காணலாம்.
இது குறித்து தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், “பயிற்சியில், அணியை உருவாக்குவது மிகவும் முக்கியமானது, எனவே நாங்கள் அணியை உருவாக்குகிறோம்.” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
Coaches 👀 Team Building 🧱⬆️
🎥➡️ https://t.co/MJzFnKmfi8#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/oqYSKpEd6g— Chennai Super Kings (@ChennaiIPL) March 29, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“