சென்னையில் 9-ந்தேதி திரைப்பட பொழுதுபோக்கு கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை:

தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தலைவர் டி.ஜி.தியாகராஜன் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி காலை 10 மணிக்கு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின், மிகப்பெரும் கருத்தரங்கு நடைபெறுகிறது.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான பத்திரிகை சந்திப்பு, நேற்று குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர், தக்‌ஷின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் தலைவர் மற்றும் நிர்வாகப் பங்குதாரர் டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் டி.ஜி. தியாகராஜன் பேசியதாவது:-

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் தென்னிந்தியாவுக்கான இந்த மாபெரும் கருத்தரங்கு நிகழ்வு நடைபெறுகிறது. இதற்கு உங்களை வரவேற்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

இந்த தொழில்துறை கூட்டமைப்பு மாநாட்டை நடத்த எனக்கு உதவியாக இருந்து இந்த கருத்தரங்கு நிகழ்வு நடைபெற காரணமாக இருந்த நண்பர்களுக்கு நன்றி. இதற்கு தக்‌ஷின் என பெயரிட்டுள்ளோம். இரு நாட்களில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று உங்களுக்கு விளக்கப்படும்’ என்று கூறினார்.

இந்த உச்சிமாநாட்டின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களான சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர், சுஜாதா விஜயகுமார், லிஸ்ஸி லட்சுமி, ஜி.தனஞ்செயன் மற்றும் பலர் உச்சி மாநாட்டின் நோக்கம் மற்றும் அதன் இலக்குகளை குறித்து விளக்கினார்கள்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த ஐகான் விருது வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.