மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைபெற்ற சேவல் சண்டையின்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது அங்கிருந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்கள் மூன்று பேர் பெண்கள்.
இந்த சண்டை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோர் இடையே நடைபெற்றதாக மெக்சிகோ மத்திய பொது பாதுகாப்பு துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு மத்திய புலனாய்வு குழு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் பல பகுதிகளில் சேவல் சண்டை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரகசியமாக அவை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.