உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். ஆளுநா் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அப்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவுடன் கைகுலுக்கிக் கொண்டார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இதையடுத்து, சட்டப்பேரவையில் பேசிய யோகி ஆதித்யநாத், “இந்த நாட்டில் எதிர்மறையான விஷயங்களுக்கு இடமில்லை. நேர்மறை எண்ணங்களைத் தூண்டி, முற்போக்கான சிந்தனைகளைப் பரப்புவோரை மட்டுமே மக்கள் ஆதரிக்கிறார்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்த எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவை முன்னோக்கிக் கொண்டு செல்லும் புதிய உ.பி-யை உருவாக்குவேன் என்று நம்புகிறேன். ஜனநாயகத்துக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இன்றியமையாதது. எங்கள் அரசாங்கம் பெண்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி வருகிறது” என்றார் .