பெங்களூரூ-பொறியியல், பி.எஸ்சி., விவசாயம் மற்றும் பி.டெக்., உட்பட பல்வேறு உயர் படிப்புகளுக்கான கர்நாடக அரசு நடத்தும் சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு, ஜூன் 16, 17, 18ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு முடித்த பின், பொறியியல், ஹோமியோபதி, பி.எஸ்சி.,யில் விவசாயம், தோட்டக்கலை, வனம், விவசாய பயோ தொழில்நுட்பம்.பி.டெக்., விவசாய பொறியியல், உணவு தொழில்நுட்பம், டெய்ரி தொழில்நுட்பம், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பி.பார்ம், டி.பார்ம்., போன்ற படிப்புகளுக்கு 1994 முதல் சி.இ.டி., தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆண்டிற்கான சி.இ.டி., தேர்வு கால அட்டவணையை, உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா நேற்று வெளியிட்டார். அதன்படி, ஜூன் 16 காலை 10:30 மணியிலிருந்து, 11:50 மணி வரை, உயிரியியல்; மதியம் 2:30 மணியிலிருந்து, 3:50 மணி வரை, கணிதம்.மறுநாள் ஜூன் 17 காலை 10:30 மணியிலிருந்து, 11:50 மணி வரை, இயற்பியல்; மதியம் 2:30 மணியிலிருந்து, 3:50 மணி வரை, ரசாயனவியல்; 18 காலை 11:30 மணியிலிருந்து, மதியம் 12:30 மணி வரை, வெளிநாடு, வெளி மாநில மாணவர்களுக்கு கட்டாய கன்னட தேர்வு நடக்கவுள்ளது.ஏப்ரல் 4 முதல் 20 மாலை 5:30 மணி வரை ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த, ஏப்ரல் 22 கடைசி நாள். மே 2 காலை 11:00 மணியிலிருந்து, 6 ல் மாலை 5:30 மணி வரை, விண்ணப்பத்தில் திருத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மே 5 ல் காலை 11:00 மணியிலிருந்து, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Advertisement