தங்களிடம் இருந்து பெறப்படும் எரிவாயுவுக்கான தொகையை தங்களது பணமான ரூபிளில் செலுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை ஜி7 நாடுகள் நிராகரித்தன.
தங்களுடன் நட்புறவில் இல்லாத நாடுகள் இனி ரஷ்ய நாணயமான ரூபிளில் மட்டுமே இயற்கை எரிவாயுவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று புதின் அறிவித்திருந்தார்.
இதுகுறித்துப் பேசிய ஜெர்மனியின் எரிசக்தித்துறை அமைச்சர் ராபர்ட் ஹேபெக், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்திற்குப் பின், ரஷ்யாவில் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுக்கு ரூபிளில் பணம் செலுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.