கலபுரகி,-அப்ஜல்புரா, தேவல கானபுபுராவின், தத்த மஹாராஜர் கோவில் உண்டியலில், 67.43 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 கிராம் தங்கம், 358 கிராம் வெள்ளிப்பொருட்கள் காணிக்கை செலுத்தப்பட்டன.கலபுரகி அப்ஜல்புராவின் தேவல கானபுராவில் உள்ள தத்த மஹாராஜர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோவிலில், கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது அதிக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஆண்டு தோறும் நான்கு முறை, கோவில் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். இதன்படி தாசில்தார் சஞ்சுகுமார் தாசரா முன்னிலையில், உண்டியல் நேற்று எண்ணப்பட்டது. 67.43 லட்சம் ரூபாய், 10 கிராம் தங்கம், 358 கிராம் வெள்ளிப்பொருட்களை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.இது மட்டுமின்றி, பக்தர் ஒருவர் உண்டியலில் கடிதம் ஒன்றை எழுதி போட்டுள்ளார். அதில், ‘மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார், கன்னட மண்ணில் மீண்டும் பிறந்து வர, அருள் புரிய வேண்டும்’ என, குறிப்பிட்டுள்ளார்.
கலபுரகி,-அப்ஜல்புரா, தேவல கானபுபுராவின், தத்த மஹாராஜர் கோவில் உண்டியலில், 67.43 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 கிராம் தங்கம், 358 கிராம் வெள்ளிப்பொருட்கள் காணிக்கை செலுத்தப்பட்டன.கலபுரகி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.