சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர்மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநரும், கோவை வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, அப் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்துள்ளார். அவர் துணைவேந்தராகப் பதவி ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார்.
26 ஆண்டுகள் ஆசிரியர் பணி் அனுபவம் கொண்ட கீதாலட்சுமி, 14 பேருக்கு பிஎச்டி வழிகாட்டியாகப் பணியாற்றியுள்ளார். அவரின் பெருமுயற்சி காரணமாக வேளாண்பல்கலைக்கழகம், பல்வேறு தேசியமற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது. 15 ஆய்வுக் கட்டுரைகள்வெளியிட்டுள்ள அவர், 11 புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும், 33 ஆராய்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
15 ஆய்வுக் கட்டுரைகள்வெளியிட்டுள்ள கீதாலட்சுமி, 11 புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும், 33 ஆராய்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.