ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியாவை தனது பந்துவீச்சில் அவுட்டாக்கிய அவர் சகோதரர் குர்னல் பாண்டியா கொடுத்த ரியாக்ஷனின் வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் 15வது சீசனில் 4வது லீக் ஆட்டத்தில் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின.
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டியின் போது ஒரு கட்டத்தில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் ஆடி கொண்டிருந்தார்.
Brother vs Brother
IPL 2022: Hardik Out On Krunal Pandya Ball#krunal #HardikPandya #GujaratTitans #GTvsLSG #LucknowSuperGiants #IPL2022 @hardikpandya7 pic.twitter.com/oW1r3Ul2iq— Vineet Sharma (@KumarVk66) March 29, 2022
அப்போது அவருக்கு லக்னோ வீரரும் அவர் சகோதரருமான குர்னல் பாண்டியா பந்துவீசினார்.
அண்ணன் குர்னலை பார்த்து ஹர்திக் பம்ம தொடங்கினார். ரன்கள் அடிக்க வேகமும் குறைந்தது.
ஒரு கட்டத்தில் பாண்டியா 33 ரன்கள் எடுத்திருந்த போது குர்னல் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தம்பியின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் அது குறித்து கொண்டாடாமல் குர்னல் அமைதி காத்து வாயில் கை வைத்து கொண்டது தான் ஹைலைட்.
தம்பியின் விக்கெட்டை அண்ணன் வீழ்த்திய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.