உடல் குளிர்ச்சிக்காக தயிர், மோர் போன்றதை உட்கொள்கிறோம்.
இவ்விரண்டில் முக்கியமாக தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
ஆனால் இதே தயிரை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரியுமா?
தேம்பல், இரும்பல்,சளி தொல்லை, ஜீரண கோளாறு, ஒவ்வாமை போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தயிரை முடிந்த அளவிற்கு குறைவாக பயன்படுத்த வேண்டும்.
உடல் உறுப்பு தானம் பெற்றவர்கள் கவனம்
எய்ட்ஸ் மற்றும் உடல் உறுப்பு தானம் பெற்றவர்களாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தயிர் உபயோகப்படுத்த கூடாது. காரணம் என்னவென்றால் முன்பே இப்பிரச்சனைகளால் அவர்களின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருக்கும், மேலும் தயிர் சாப்பிடுவதால் மேற்கொண்டு பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
உடலில் சரும பிரச்னைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தயிர் உட்கொள்ளாதீர்கள். இதனால் பிரச்சனை அதிகரிக்க கூடும்.
சுவாச கோளாறு அபாயம்
தயிரை அதிகமாக சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இரும்பல் பிரச்சனை ஏற்படும். இதன் விளைவாக சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உண்டு என்பதை மறவாதீர்கள்.
இரவில் தயிரைப் பருகக் கூடாது. ஏனெனில் அது மார்பில் சளியை உண்டாக்கும்.
மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும்.