சென்னை: தாம்பரம் மாநகராட்சியின் மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர்கள் பட்டியலை திமுக தலைமை நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: மண்டலம்-1 வெ.கருணாநிதி, மண்டலம்-2 ஜோசப் அண்ணாதுரை, மண்டலம்-3 மகாலட்சுமி கருணாகரன், மண்டலம்-4 டி.காமராஜ், மண்டலம்-5 எஸ்.இந்திரன்,நிலைக்குழு தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர்: கணக்குக் குழுத் தலைவர் மதினாபேகம், பொது சுகாதாரக்குழு தலைவர் ரா.நரேஷ்கண்ணா, கல்விக்குழு தலைவர் கற்பகம் சுரேஷ், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் ரமணி ஆதிமூலம், நகரமைப்பு குழு தலைவர் ஆ.நடராஜன், பணிகள் குழு தலைவர் சுந்தரி ஜெயக்குமார், நியமனக்குழு உறுப்பினர் எஸ்.சேகர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.