திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 5 நிமிடங்களில் 159 முறை கடினமான சீக்கியாசனத்தை செய்து 7ஆம் வகுப்பு மாணவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வெங்கடரமணா – சந்திரா தம்பதியினரின் மகளான பி.வி மேக பிரியா, வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியில் யோகா பயின்று வரும் நிலையில் நோபல் உலக சாதனை முயற்சியாக 159 முறை சீக்கியாசனத்தை செய்தார்.
இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் மாணவிக்கு வழங்கப்பட்டது.