மும்பை: பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் சரியாக ஓடுவதில்லை என வருத்தப்பட்டுள்ளார் சல்மான் கான். இதுகுறித்து அவர் கூறியது: பாகுபலி, கேஜிஎப், புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்கள் தென்னிந்திய சினிமாவிலிருந்து வெளியாகி, பான் இந்தியா படங்களாக வெற்றி பெறுகின்றன. இந்த படங்களை இந்தியில் டப்பிங் செய்து வௌியிடும்போது, அதற்கு ரசிகர்கள் உரிய மரியாதை தருகிறார்கள். இந்தி படங்களின் வசூலையே அவர்கள் முறியடிக்கிறார்கள். அதேபோல், இந்தி படங்கள் தென்னிந்திய சினிமாவில் ஓடாதது வருத்தம் தருகிறது. பல இந்தி படங்களை தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுகிறோம். ஆனால் போதிய வரவேற்பு பெறுவதில்லை. இதற்கு காரணம், இந்தி படங்களில் ஹீரோயிசம் அதிகமாக இருப்பதில்லை. பான் இந்தியா ரசிகர்களும் விரும்பும் விஷயம், ஹீரோயிசம்தான். அதை வைத்துதான் தென்னிந்திய படங்கள் வட இந்தியாவிலும் கலக்குகின்றன. இனி இந்தி படங்களில் ஹீரோயிசம் விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். சில இந்தி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். அந்த படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. அதுபோல் நிறைய இந்தி படங்களை தென்னிந்திய சினிமாவில் ரீமேக் செய்ய வைக்க வேண்டும்.இவ்வாறு சல்மான் கான் கூறினார்.