சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ராகேஷ், காரில் குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இன்று காலை சென்னை – திருச்சி தேசியநெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சனமங்கலம் என்ற இடத்தில் காரிலிருந்து புகை வந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேரும் அவசர அவசரமாக வெளியே இறங்கிய நிலையில், கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. சரியான நேரத்தில் இறங்கியதால் நல்வாய்ப்பாக 6 பேரும் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இயந்திரக்கோளாறு காரணமாக கார் தீப்பற்றி எரிந்ததாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM