அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க முகமைகள் மட்டுமே, தொலைபேசி பேச்சுகளை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ் அப் உரையாடல்கள் உள்ளிட்ட மின்னணு தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க, தேசிய அல்லது சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க முகமைகள் மட்டுமே, 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ம் பிரிவின் கீழ், தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்கவும், கணினியில் சேமித்து வைக்கப்பட்ட தகவல்களை கைப்பற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவில், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், நீதிபதிகள், அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்து சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM