தோசை, சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி குருமா… சிம்பிள் ஸ்டெப்ஸ் பாருங்க!

Pattani Kurma recipe in tamil: இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன்களுக்கு சரியான சைடிஷ் தயார் செய்வதில் நாம் அவ்வப்போது குழப்பம் அடைந்து விடுகிறோம். இந்த நேரத்தில் சிம்பிளான சைடிஷ் ரெசிபிகளை தேடுவோம். அந்தவ கையில், பச்சை பட்டாணி குருமா ரொம்பவே ஈஸியான ரெசிபி ஆகும்.

இந்த பச்சை பட்டாணி குருமா தோசை, நாண், சப்பாத்தி, இட்லிக்கு பொருத்தமான ஒன்றாகும். ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் தாயார் செய்து சாப்பிட தோன்றும் ஒரு குருமா ஆகும். இந்த டேஸ்டி ரெசிபியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 3
தக்காளி – 4
பச்சைமிளகாய் – 4
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் பால் முதல் பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

பச்சை பட்டாணி குருமா சிம்பிள் செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப்பட்டாணியை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.

பிறகு கொத்தமல்லி, பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்.

பின்னர் 2 தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும். மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தொடர்ந்து ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை சோம்பு, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்ததாக வெட்டி நறுக்கி வைத்துள்ள 2 தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கிய பின்னர் முன்பு அரைத்து வைத்த தக்காளி சேர்க்கவும்.

தொடர்ந்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்த பிறகு தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு கீழே இறக்கவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான பச்சை பட்டாணி குருமா தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.