அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பெட்டி டெய்லர்(12) தொலைந்து சென்றதை அடுத்து அவர் இறந்து இருக்கக்கூடும் என பயப்படுவதாக அவரது தயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பெட்டி டெய்லர்(12) கடந்த 20ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இதுவரை எட்டு நாள்கள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் பெரும் சோகத்தில் முழ்கியுள்ளனர்.
இதையடுத்து, கிரஹாம் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் பெட்டி டெய்லர் அவரது தந்தையிடம் நான் வீட்டை விட்டு வெளியேற போவதாகவும், இனி திரும்பி வரப்போவது இல்லை என தெரிவித்துவிட்டு வெளியேறி இருப்பதாக தெரிவித்துள்ளது.
பெட்டி டெய்லர் இன்னமும் வீடு திரும்பாத நிலையில், அவள் உணவு உண்டாளா , பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாளா என்று எனக்கு ஏதும் தெரியவில்லை, மேலும் அவள் இறந்து இருக்க கூடுமோ என தாம் அஞ்சுவதாக மிகுந்த மன வேதனையுடன் அவரது தாயார் போனி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
பெட்டி டெய்லர் கடைசியாக மார்ச் மாதம் 20ம் திகதி காலை 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை பொலிசார் ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள், தேடுதல் வாகனங்கள் என அனைத்தையும் கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் அவரது அங்க அடையாளங்களை வெளியீட்டு யாரும் அவரை கண்டால் தொடர்புகொள்ளும் படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெய்லரை தேடும் பணியில் அந்த பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களும் தற்போது இணைந்துள்ளனர்.