பெங்களூரு,-காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மார்ச் 31ல் பெங்களூரு வருகிறார். துமகூரு சித்தகங்கா மடத்தின், சிவகுமார சுவாமிகளின் 116வது ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க, மேலிட தலைவர் ராகுல் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஏப்ரல் 1ல், பெங்களூரு வரவிருந்தார். ஆனால் இதே நாளில், மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,வின் அமித் ஷா, கர்நாடகா வருகிறார்.ஒரே நாளில் இரு தலைவர்கள் வந்தால் நன்றாக இருக்காது என நினைத்து, தன் சுற்றுப்பயணத்தை மாற்றி அமைத்துள்ளார்.அமித் ஷா வந்த பிறகு வந்தால் நன்றாக இருக்காது என, எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா ஆலோசனை கூறினார்.அதையடுத்து, ஒரு நாள் முன்னதாக, இம்மாதம் 31ல் ராகுல் கர்நாடகா வருகிறார்.இங்கிருந்து சாலை வழியாக, துமகூரு சென்று, சித்தகங்கா மடத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதே நாள், டில்லிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக, காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. வரவேற்க தொண்டர்கள் தயாராகின்றனர்.இதற்கிடையே, கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதை எதிர்கொள்ள வேண்டிய வியூகங்களை வகுக்க, கட்சியின் மூத்த தலைவர்களான, மாநில தலைவர் சிவகுமார் மற்றும் சித்தராமையாவுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.ஆனால், அவர்கள் இருவரும், இருவரின் ஆதரவாளர்களும் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். அந்த, ‘பஞ்சாயத்தை’யும் ராகுல் விசாரிக்க உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement