நாடு முழுவதும் காவிக் கொடியை பறக்க விட வேண்டும் என்று
பாஜக
முனைப்பு காட்டி வருகிறது. அதற்கு ஏற்றவகையில், பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் அதன் தோழமை கட்சிகள் ஆட்சியில் உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக நான்கு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
காங்கிரஸ்
கட்சி படு தோல்வியடைந்துள்ளது.
சுதந்திர இந்தியாவில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய காங்கிரஸ் கட்சி தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால், அக்கட்சியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அடிருப்தி தலைவர்கள் தனி அணியாக செயல்பட்டு அவ்வப்போது கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சிகளையும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த அணியில் காங்கிரஸ் இணையுமா என்பது கேள்வியாக உள்ளது. காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கும் முனைப்பில் சில மாநில அரசியல் தலைவர்கள் உள்ளனர். அதன்படி, காங்கிரஸ் அல்லாத அணி உருவானாம் அது பாஜகவுக்கு பலமாக மட்டுமே அமையும் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், “ஜனநாயகம் சரிவர இயங்க வேண்டுமென்றால் வலிமையான எதிர்க்கட்சி அவசியம். எனவே, காங்கிரஸ் தேசிய அளவில் வலிமையான கட்சியாக திகழ வேண்டும். அதுவே எனது ஆழ்மனது விருப்பம். காங்கிரஸ் பலவீனமடைந்தால் அந்த இடத்தை பல்வேறு மாநில கட்சிகள் நிரப்பும் நிலை ஏற்படும். அப்படி ஏற்பட்டால், அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான
நிதின் கட்கரி
கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் சாவந்த் இதுபற்றி கூறுகையில், கட்கரியின் கருத்தை தங்கள் கட்சி வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த செய்திகொரோனா 4 ஆவது அலை… ஒன்றிய அரசுக்கு விசிக எம்பி கேள்வி!