Kanchan Vasdev
பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். கர் கர் ரேஷன் யோஜனா திட்டத்தின் கீழ், மாநில அரசு கோதுமையை பைகளில் அடைத்து, பயனாளிகளின் வீட்டு வாசலில் விநியோகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம் என்ன?
புதிய கர் கர் ரேஷன் யோஜ்னாவின் கீழ், முதல்வர் பகவந்த் மான் அறிவித்தபடி, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மாற்றப்பட்ட பதிப்பான மாநில அரசின் அட்டா-தால் திட்டம் மூலம் பயனாளிகள் தங்கள் வீட்டு வாசலில் ரேஷன் பொருள்களை பெறுவார்கள். இத்திட்டத்தை நியாய விலைக் கடைகள் அல்லது ரேஷன் டிப்போக்களுக்கு வெளியே வரிசையில் நிற்க விரும்பாதோர் தாரளமாக தேர்வுசெய்யலாம்.
அட்டா-தால் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை?
பஞ்சாபில் அட்டா-தால் திட்டத்தில் 1.54 கோடி பயனாளிகள் (43 லட்சம் குடும்பம்) உள்ளனர். அரசு ஒவ்வொரு பயனாளிக்கும் 5 கிலோ கோதுமையை ஒரு கிலோ 2 ரூபாய்க்கு விதம் மாதந்தோறும் வழங்குகிறது. இத்திட்டத்திற்கு கோதுமை மாவு மற்றும் பருப்புகளின் பெயர் சூட்டப்பட்டாலும், நிதிப் பற்றாக்குறையால், மாநிலத்தால் பருப்பு வகைகளை வழங்க முடியவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேயிலை துாள்,சர்க்கரை வாக்குறுதிகளை அளித்து வருகின்றன, ஆனால் நிதி பற்றாக்குறையால் அவை ஒருபோதும் நிறைவேறவில்லை.
திட்டத்துக்கு நிதியளிப்பவர் யார்?
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) 2013ன் கீழ் 1.43 லட்சம் பயனாளிகளுக்காக (34 லட்சம் குடும்பங்கள்) இத்திட்டத்திற்கு மையம் நிதியுதவி அளிக்கிறது. இவை மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட BPL குடும்பங்கள் ஆகும். பஞ்சாப் தனியாக ப்ளூ கார்டுகளை வழங்குவதன் மூலம் அதன் சொந்த பயனாளிகளின் பட்டியலையும் வைத்துள்ளது. இந்த பயனாளிகளின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 30,000க்கு குறைவாக உள்ளது,
இது பிபிஎல் பிரிவினருக்கான மையம் நிர்ணயித்த வரம்பை விட அதிகமாகும். 36 லட்சம் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1700 கோடி ரூபாய் மானியத் தொகையை மத்திய அரசு செலுத்துகிறது. போக்குவரத்துக் கட்டணத்தில் பாதியையும் செலுத்துகிறது. மீதமுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கான தொகை மாநில அரசால் ஏற்கப்படுகிறது.
விநியோகிக்கப்பது எப்படி?
பஞ்சாப் மாநிலம் முதலில் பயனாளிகளுக்கு கோதுமை மாவை தான் வழங்கியது. ஆனால், மாவு கெட்டுப்போனதாகவும், நோய்த்தொற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அதற்கு பதிலாக கோதுமை வழங்க முடிவு செய்தது. தற்போது நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ரேஷன் கிடங்குகள் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கோதுமை வழங்கப்படுகிறது.
எத்தனை ரேஷன் டிப்போக்கள் திட்டத்தில் உள்ளன?
மாநிலத்தில் 26,000 ரேஷன் கிடங்குகள் உள்ளன. அவர்கள் ஒவ்வொரு பயனாளியின் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (e-POS) இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
16 டிப்போக்கள் ஒரு EPOS இயந்திரத்தைப் பயன்படுத்துவதால், டெலிவரி செயல்முறையில் தாமதம் ஏற்படுகிறது. அதனால், ஒரு காலாண்டு டெலிவரிக்கு ஒரு மாதம் எடுக்கக்கூடும்.
ஒவ்வொரு டெப்போவிலும் சுமார் 300 பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் உள்ளனர். இயந்திரம் வெவ்வேறு டிப்போக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பயனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
டெல்லி அரசு அறிவித்த அதே திட்டத்தின் நகலா இது?
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தளவாட அமைப்புகளை பஞ்சாப் அரசு செய்து வருகிறது. டெல்லியில் இத்திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு, ஹோம் டெலிவரிக்கு ஆகும் போக்குவரத்துக்கு செலவுக்காகன பணத்தை தராது என அரசு அதிகாரிகள் கருதுகின்றனர். பயனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் வழங்குவதற்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையும் டெல்லி அரசிடம் இல்லை.
டெல்லியில், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கும், யூனியன் பிரதேச அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் பல முறை ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சிக்கு எழுதிய கடிதத்தில், வீடுகளுக்கு ரேஷன் வழங்குவதற்கான திட்டம் NFSA-விடம் கிடையாது. இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து (FCI) ரேஷன் வாங்கி அதை விநியோகித்தால் இந்தத் திட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் NFSA இன் கீழ் மாநிலத்திற்கு வழங்கப்படும் தானியங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என தெரிவித்திருந்தது.
ரேஷன் பொருளை வீட்டுக்கே வழங்க அரசு எப்படி திட்டமிட்டுள்ளது?
டெல்லியை பொறுத்தவரை, டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (டிஎஸ்சிஎஸ்சி) உடன் இணைக்கப்பட்ட மில்லர்கள், இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) ஆறு குடோன்களில் இருந்து கோதுமை, அரிசியை பதப்படுத்துவதற்கும் சுத்தம் செய்வதற்கும் முன் எடுத்தாக வேண்டும். அவற்றை ரேஷன் டெப்போக்களுக்கு அனுப்பி, டெல்லி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடி லிமிடெட் மூலம் (DCCWS), உணவு தானியங்களை விநியோகிக்க தனியார் ஏஜென்சிகளுக்கு அனுப்பப்பட வேண்டியிருந்தது. ஆனால், பஞ்சாப்பை பொறுத்தவரை, உணவு மற்றும் சிவில் சப்ளை துறையால் ரேஷன் டிப்போக்களுக்கு கோதுமை வழங்கப்படுகிறது. அவர்கள் அதனை பயனாளிகளுக்கு நேரடியாக சென்று வழங்குகின்றனர்.