பெங்களூரு-”மாநிலத்தில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளை, பள்ளி வளாகத்திலேயே துவக்க அரசு ஆலோசிக்கிறது,” என தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.சட்ட மேலவை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் ஸ்ரீகண்டேகவுடா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் நாகேஷ் நேற்று கூறியதாவது:புதிய தேசிய கல்வி கொள்கைப்படி, 3 வயது சிறார்களை பள்ளியில் சேர்த்துக்கொள்வதால், அங்கன்வாடிகளை பள்ளி வளாகத்திலேயே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இது அவர்களின் கல்விக்கு, உதவியாக இருக்கும்.மாநிலத்தின் அரசு தொடக்கப்பள்ளிகளில், 2016 — 17 லிருந்து ‘குழந்தைகள் வீடு’ என்ற பெயரில், சிறிய குழந்தைகளுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. மாண்டியாவில் முதன் முறையாக, இது போன்ற வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.கர்நாடக பப்ளிக் பள்ளிகளில், குழந்தைகள் வீடு துவங்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கவுரவ நிதி வழங்குவது உட்பட மற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement