பிரித்தானியாவில் கத்தியால் குத்தப்பட்ட கேரள மாணவி: இந்தியர் கைது!


பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சோனா பிஜு(Sona Biju) அந்த நாட்டை சேர்ந்த இளைஞர் ஸ்ரீராம் அம்பர்லா(Sriram Ambarla) என்பவரால் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பல்கலைக்கழத்தில் கல்வி பயின்று வந்த இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சோனா பிஜு(Sona Biju) அங்குள்ள  இந்திய உணவகம்(Hyderabad Wala biryani restaurant) ஒன்றில் பகுதிநேர வேலை செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் உணவகத்தில் ஏற்பட்டுள்ள தகராறில் ஸ்ரீராம் அம்பர்லா(26) என்பவர் இந்தியாவை சேர்ந்த 20-வது வயது மதிக்கத்தக்க சோனா பிஜு என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீராம் அம்பர்லாவை(26) பிரித்தானிய பொலிசார் கொலை முயற்சி வழக்கில் கைதி செய்து கடந்த திங்கள்கிழமை தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் அவரை ஏப்ரல் 25ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

இதுவரை பிரித்தானிய பொலிசார் நடத்திய விசாரணையில், குற்றவாளி ஸ்ரீராம் அம்பர்லாவிற்கு நிரந்தரமான தங்கும் இடம் என்று எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

அதனை

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் சோனா பிஜு மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்றுவந்த நிலையில் அவர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் யாரேனும் தெரிவிக்க விருப்பினால் பிரித்தானிய போலீசாரை உடனடியாக தொடர்புகொள்ளும் படியும் அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ தொண்டு நிறுவனத்தை தொடர்புகொள்ளும்படியும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து ஒத்துழைப்பையும் பிரித்தானிய போலீசார் தெரிவிக்க தயராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.