பெங்களூரு-”எண்ணெய் நிறுவனங்களிலிருந்து பெட்ரோல், டீசல் வினியோகிக்கும் போது, டாங்கர்களில் சிறிய டாங்க் பொருத்தி, பெட்ரோல், டீசல் திருடியது குறித்து விசாரணை நடத்தப்படும்,” என உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கத்தி தெரிவித்தார்.சட்ட மேலவை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் மரிதிப்பே கவுடா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் உமேஷ் கத்தி கூறியதாவது:எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் வினியோகிக்கும் போது, டாங்கர்களுக்குள் ஒரு சிறிய டாங்க் அமைத்து, பெட்ரோல், டீசல் திருடுவோர் மீது, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திருட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பிருந்தால், அவர்களை காப்பாற்றுவது என்ற கேள்விக்கே இடமில்லை.அவர்கள் மீதும் தயவு தாட்சண்யமின்றி, நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற மோசடி, முறைகேடு எங்கெங்கு நடக்கிறது என்பதை பற்றி தகவல் தாருங்கள். நடவடிக்கை எடுப்போம்.பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட்டின், தேவனகுந்தியில் உள்ள, எச்.டி.சி.எல்., ஆயில் டர்மினலில், டாங்கருக்குள் சிறிய டாங்க் பொருத்தி, பெட்ரோல், டீசல் திருடுவது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவாகி விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement