உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அக்காவை போலவே அவரது தங்கையான அக்ஷரா ஹாசனும் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இந்தியில் அக்ஷரா நடித்த ‘ஷமிதாப்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் அக்ஷரா சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் அக்ஷரா நடித்திருந்தார். தனது அப்பாவை வைத்து இவர் இயக்கி வந்த ‘சபாஷ் நாயுடு’ படம் பாதியில் கை விடப்பட்டது.
தமிழில் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான்’ படத்தில் அக்ஷரா நடித்திருந்தார். தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் ஓடிடி வெளியீடாக ’
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
’ படம் வெளியாகியுள்ளது.
சுவீடன் நாட்டு நடிகையை ஓகே பண்ணிய தனுஷ்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
இந்த படம் குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அக்சராஹாசன், ‘இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கடையில் ஆணுறை வாங்குவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்சரா, ‘ஒரு பெண் தனியே கடைக்கு சென்று ஆணுறை வாங்கினால் என்ன தப்பு? அதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்கள் பாதுகாப்பாக செக்ஸ் செய்கிறீர்கள், ஒழுங்காக செக்ஸ் நடக்கிறது என்றுதான் அர்த்தம். அதில் என்ன பிரச்சினை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இங்கே பெண்கள் செக்ஸை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது முடியாது. பெண்களும் மனிதர்கள்தான் என்று தெரிவித்துள்ளார். அக்சராஹாசனின் இந்த வெளிப்படையான பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
படம் முழுக்க Goosebumps; பின்னி பெடலெடுத்துட்டாரு ராஜமௌலி!
அடுத்த செய்திபிரபல இயக்குனர் திரைப்படத்தில் இணையும் அட்டக்கத்தி தினேஷ்…!