மாமூல் கேட்டு தராததால் டீக்கடை மற்றும் பிரியாணி கடையை அடித்து உடைத்த திமுக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதி 31-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரின் உறவினரான தினேஷும் அவரது நண்பரான சுகுமாரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளில் மாமூல் கேட்டுள்ளனர். அப்போது, பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் கடையை அடித்து உடைத்து தகராறு செய்துள்ளனர்.
இதுகுறித்து, கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளோடு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM